தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று  திருவண்ணாமலை நகராட்சி காந்தி நகர் துராபலி தெருவில் உள்ள நியாயவிலை கடை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் முக்கிய துறைகளில் ஒன்றாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருவதாகவும் கூட்டுறவுத் துறையில் வேளாண் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண் கடனாக கடந்த ஆண்டு மட்டில் 13, ஆயிரத்து 442 கோடி 17.44 லட்சம் பேருக்கு வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், விளிம்பு நிலையில் உள்ளவர்களும் நடுத்தர வர்க்கத்தினராலும் தான் கூட்டுறவு மூலமாக கூட்டுறவே நாட்டுறையை நாட்டு உயர்வு முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எளிதில் கடன்கள் கிடைக்கக்கூடிய ஒரு துறையாகவும் கூட்டுறவுத்துறை இருப்பதாகவும் தெரிவித்தார். 




இந்த ஆண்டு கூட்டுறவுத் துறையில் வேளாண்மைக்காக 500 கோடி வரை 2 ஆயிரம் ஆரம்ப வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு மிஷனரிகள் வாங்குவதற்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  கடன் கொடுத்து கடன் வாங்கும் துறையாக கூட்டுறவுத்துறை இல்லாமல் தொழிலுக்காக கடன் கொடுக்கும் ஒரு துறையாகவும் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் 5884 கூட்டுறவு நியாய விலை கடைக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பெற்றுள்ளதாகவும் , இந்த ஆண்டு 3 ஆயிரத்து 876 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 35.29 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  4.36 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 7 ஆயிரத்து 191.54 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


 




 


அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பிரதான கிளையில் மகளிர் சுய உதவி குழுக்கடன் 1 குழுவிற்கு ரூ.20 லட்சம், விதவை மற்றும் கைம்பெண்கள் கடன் 2 பேருக்கு ரூ.1 லட்சம், மாற்றுத்திறனாளிகள் கடன் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம், சிறு வணிக கடன் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம், கறவை மாடு கடன் 5 பேருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 14 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 39 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 44 லட்சத்து 89 ஆயிரம் கடன் உதவிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்த திடீர் ஆய்வில் மாவட்ட முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாதர்ஷினி, கூட்டுறவு மண்டல சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜெயம் மற்றும் பலர் உடனிருந்தனர்.