Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 47.23 அல்லது 0.08 % புள்ளிகள் குறைந்து 60,602.15 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 9.05 அல்லது 0.05% புள்ளிகள் குறைந்து 17,906.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. 


லாபம்-நஷ்டம்


விப்ரோ, கோல் இந்தியா, ஹின்டல்கோ, எஸ்பிஐ, இன்போசிஸ், லார்சன், ஹிரோ மோட்டோகோர்ப், ரிலையன்ஸ், டிசிஎஸ், பிரிட்டானியா, டெக் மகேந்திரா, எச்டிஎஃப்சி லைப்,  கிராசிம், நெஸ்டீலே, டாடா கான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 


பஜாஜ் பின்சர்வ், ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, எச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனக்ஙளின் பங்குகள் சரிவை கண்டுள்ளன..


இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை மந்தமாகவே காணப்பட்டது. அதன்படி, வாரத்தின் இறுதி நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கியிருந்தது முதலீட்டளார்களை கவலையை ஏற்படுத்தியுள்ளது.






இந்நிலையில், இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.75 ஆக உள்ளது.