Crime: கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரியை வீடு புகுந்து மர்ம நபர்கள் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. 


கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதிமா (47). இவர் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி  வந்தார். இவர் சுப்ரமணியபோரா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் தனது கணவருடன் சுப்ரமணியபோரா என்ற பகுதியில் வீட்டில் வசித்து வந்திருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு 8.30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார் பிரதிமா.


பிரதிமாவின் கணவர் மற்றும் சகோதரர் தொடர்ந்து இரவு முழுவதும் அவருக்கு போன் செய்து வந்திருக்கின்றனர். ஆனால், அவர் பதலளிக்காமல் இருந்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த பெண் பிரதிமாவின் சகோதரர் வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியிருக்கிறார். ஆனால், வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததை அடுத்து, கதவை உடைத்திருக்கிறார். பின்னர், அங்குள்ள ஒரு அறையில் பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவம்  இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பிரேத பரிசோதனையில் அந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. 


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை யார் செய்தார்? என்ன காரணம்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அரசு பெண் அதிகாரியை மர்ம நபர்கள் வீடு புகுந்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


Crime: பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 3 துண்டுகளாக வெட்டப்பட்ட கொடூரம் - உ.பியில் ஷாக்!


Atrocities On Dalits: தொடரும் சாதீயம்! பட்டியலின இளைஞரை தாக்கி சிறுநீர் கழித்த கொடூரம் - 6 பேர் கும்பல் அட்டூழியம்!


Delhi Dog Attack: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.. பிட்புல் நாயை விட்டு கடிக்க வைத்த நபர் - டெல்லியில் கொடூரம்