Atrocities On Dalits: ஆந்திராவில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதிய வன்மங்கள்:
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்நிலையில், தற்போது ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
என்ன நடந்தது?
ஆந்திர மாநிலம் கஞ்சிகச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் குமார். இவர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர். இவருக்கு ஹரிஷ் ரெட்டி என்று ஒரு நண்பர் இருக்கிறார். இவர் சம்பவத்தன்று இரவு ஷியாம் குமாரை வெளியே செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இவரை சிவசாய் க்ஷேத்ரா என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஹரிஷ் ரெட்டியின் நண்பர் 5 நண்பர்கள் இருந்தனர். இவர்கள் ஷியாம் குமாரை வலுக்கட்டயமாக காரில் ஏற்றியுள்ளார். பின்னர், அவரை குண்டூருக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதற்கிடையில், ஷியாம் குமாலை காரில் வைத்து கொடூரமாக அடித்துள்ளதாக தெரிகிறது. குண்டூர் வரும் வரை அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளனர். பின்னர், குண்டூர் வந்தவுடன் அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு அடித்துள்ளனர். இதனை அடுத்து, ஷியாம் குமார் தண்ணீர் கேட்டபோது அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். சுமார் 4 மணி நேரம் அவரை பிடித்து வைத்து தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் எற்ப்ட்டது.
6 பேர் கைது:
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”கஞ்சிகச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் குமார். இவரை 6 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சுமார் நான்கு மணி நேரம் தாக்கியுள்ளனர். மேலும், அவர் தண்ணீர் கேட்டதற்கு அவரது முகத்தில் சிறுநீர் கழித்துள்ளனர். அவர்கள் ஆறு பேர் மீது ஜாமீனில் வராதப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக அவர் தாக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
மேலும் படிக்க