அதிமுக சார்பில் உணவு 


சென்னை அதிமுக வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ராம் நாயக்கன் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உணவுகளை வழங்கினார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது ; 


வடகிழக்கு பருவமழை கடுமையான தாக்கத்தை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என கூறினார். 


மழை நீர் வடிகால்பணிகள் குறித்து அமைச்சர்களே மாறி மாறி பேசி வருகிறார்கள். மழை காலத்தில் யாராவது மழை நீர் வடிகால்வாய்கள் பணிகளை மேற்கொள்வார்களா என கேள்வி எழுப்பினார்.


கத்து குட்டி போல் பதில்


ரிப்பன் மாளிகையில் துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்ட போது செய்தியாளர்கள் கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை. செய்தியாளர் சரியாக கேட்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என அதற்கு துணை முதலமைச்சர் பதில் சொல்கிறார் , மழை வந்தது என்று இப்படி பேசுவது
துணை முதலமைச்சர் ஒரு கத்துக்குட்டி போல பதில் அளிக்கிறார்.


நீர்வழித்தடத்தில் அடைப்புகள் உள்ளது எனவும் பேரிடர் காலங்களை எப்படி எதிர்க்கொள்வது என எந்த திட்டங்களையும் அரசு மேற்கொள்ளவில்லை. அவர்கள் செய்த திட்டங்கள் என்னென்ன என கேள்வி எழுப்பினார்.


வேளச்சேரி பாலத்தில் மக்கள் பயத்து வாகனத்தை நிறுத்தி உள்ளனர். இது ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இல்லாதது என காட்டுகிறது என தெரிவித்தார்.


எதிர்க்கட்சி தலைவர்  கேள்விக்கு பொறுப்பாக பதில் அளி்க்காமல் விளையாட்டு பிள்ளையாக துணை பதில் அளிக்கிறார். துணை முதலமைச்சர் தெளிவாக இருக்கிறா ? அல்லது தெளிவில்லாமல் இருக்கிறா ? என தெரியவில்லை எனவும் நான் என்ன சொல்கிறேன் என புரியும் உங்களுக்கு என கூறினார்.


முதலமைச்சர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீர்


அரசை பொறுத்தவரை வேலை பார்பது போல காட்டி கொள்கிறார்கள். 
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. முதலமைச்சர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீரில் இருந்தது. 


வடகிழக்கு பருவமழை கடுமையான தாக்கத்தை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை. முன்னேற்பாடுகளை ஏற்படுத்தவில்லை. வானிலை ஆய்வாளர்கள் கடுமையாக மழை இருக்கும் என கூறப்பட்ட போதும் கூட முன்னேற்பாடுகளை செய்யவில்லை என தெரிவித்தார். 


திமுகவின் சாயம் வெளுத்திருக்கும்


சென்னை பாண்டிச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என கூறிய நிலையில் புயலாக மாறவில்லை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்று விட்டது அதனால் மழை குறைந்து விட்டது. இன்றைக்கு ரெட் அலர்ட் கொடுத்தார்கள் ஆனால் மழை இல்லை எனவும் இன்றைக்கு மழை பெய்திருந்தால் திமுகவின் சாயம் வெளுத்து இருக்கும் எனவும் தெரிவித்தார்.


அம்மா உணவகங்கள் மூடல்


தற்போது பெய்த மழைக்கு நீர் போவதற்கு இடம் இல்லை. கழிவு நீரோடு மழை நீரும் கலந்து உள்ளது. அம்மா உணவங்கள் மதியம் 12 மணிக்கே மூடிவிடுகிறார்கள்.
அம்மா உணவங்களில் உணவை வாங்கி மாநகராட்சி கவுன்சிலர் புஷ்பா என்பவர் காரில் எடுத்து சென்று அவர்கள் செலவில் மக்களுக்கு சாப்பாடு போடுவது போன்று செயல்படுகிறார் என குற்றச் சாட்டினார். அம்மா உணவங்களில் இலவச உணவு வழங்குவது எல்லாம் எடப்பாடி ஆட்சி காலத்திலே கொண்டு வரப்பட்டது. மழை முடிந்த பிறகு இலவசமாக உணவு கொடுப்பதாக கூறுகின்றனர். 


மழை குறைவாக பெய்ததால் மழை நீர் சென்று விட்டதாக திமுகவினர் கூறி வருகிறார்கள். ஆனாலும் பல இடத்தில் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து உள்ளது. முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். 


மாநகராட்சி பணிகளுக்காக 14 ஆயிரம் கோடியே ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் செலவு செய்துள்ளோம். அப்போது என்னென்ன துறைகளுக்கு எவ்வளவு என செலவு செய்துள்ளோம் என எங்களிடம் உள்ளது. ஆனால் திமுகவால் அப்படி வெளிப்படையாக அப்படி சொல்ல முடியுமா என தெரிவித்தார். ஒரு நாட்டிற்கு குடும்ப தலைவர் முதலமைச்சர் தான் அவர் தான் அனைத்திற்கும் பொறுப்பு. 
அப்போது தான் அதிகாராகள் மதிப்பார்கள். எங்கள் ஆட்சி காலத்தில் காவலர்கள் ஸ்காட்லாந்து போலீசாக இருந்தனர். ஆனால் இன்று கைகட்டி எப்படி என்று உங்களுக்கே தெரியும் என கூறினார்.


தவறு செய்தால் அமைச்சர் நம்மை மாற்றி விடுவார் என அதிகாரிகள் தங்கள் ஆட்சி காலத்தில் பணியாற்றினார்கள். மேலும் தற்போதை மாநகராட்சி ஆணையர் குப்பை வரி வாங்க தான் ஆர்வம் காட்டுவார் எனவும் அமைச்சர் சேகர் பாபு கொண்டு வந்த ஆணையர் தான் இப்போ இருக்கிறார்கள் என தெரிவித்தார்.


இந்த மழை காலத்தில் அரசின் செயல்பாடுகளை ஆளுநர் பாராட்டியது குறித்தான கேள்விக்கு


ஆளுநரும் அரசும் ஒன்றாகி விட்டனர். ஆளுநர் ஒழிக எனக் கூறிவிட்டு ஆளுநர் வாழ்க எனக் கூறி வருகின்றனர். பிரதமரை பார்த்து விட்டு வந்த பிறகு பிரதமர் அனுசரித்து போகுமாறு கூறியவுடன் ஆளுநருடன் ஆனுசரித்து செல்கிறது திமுக என கூறினார். அமைச்சர் பொன்முடியை யாரை கேட்டு மாற்றினார்கள். 
தற்போதை உயர்கல்வித்துறை அமைச்சர் சொல்கிறார் ஆளுநர் உடன் மோதல் போக்கு இல்லாமல் செல்ல  இருக்கிறோம் என கூறுகிறார். பிரதமரோடு திமுக ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது என தெரிவித்தார்.