சென்னையில் காவலர், அவரது மனைவி மீது போதையில் இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை மாதவரத்தில் உள்ள பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் தனது மனைவி யுவஸ்ரீயுடன் வசித்து வருகிறார். கோடீஸ்வரன் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மனைவி யுவஸ்ரீயுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளார். அப்போது  மேல்பட்டி பொன்னப்பன் தெரு வழியாக மாதவரத்திற்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்துள்ளார். 


Crime : நிலத்தை கொடுக்கமாட்டியா? மனைவியை கொன்ற கணவன்...பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கியது எப்படி?


அப்போது அவ்வழியாக இறுதி ஊர்வலம் ஒன்று வந்துள்ளது. அதில் பங்கேற்றவர்களில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற மாலைகளை சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது வீசி அட்டகாசம் செய்தனர். இதனை பலரும் தட்டிக்கேட்ட நிலையில் அவர்களிடம் தகராறு செய்தனர். இதேபோல் கோடீஸ்வரனும், யுவஸ்ரீயும் இறுதி ஊர்வலத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரன் மீது மாலைகளை தூக்கி எறிந்துள்ளனர். 


இதனால் கோபமான கோடீஸ்வரன் உடனே பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அந்த இளைஞர்களை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பைக்கை எட்டி உதைத்துள்ளனர். இதனால் கோடீஸ்வரனும், யுவஸ்ரீயும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த இளைஞர்கள் அவர்களை சரமாரியாக தாக்கினர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் வந்து இருவரையும் போதை இளைஞர்களிடம் இருந்து மீட்டனர்.


Crime : திருச்சியில் பயங்கரம்.. பணத்துக்காக மனைவி கொலை.. மஞ்சளை பூசி மனைவி சடலத்தை மறைத்த கணவன்..


பின்னர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கோடீஸ்வரன் வியாசர்பாடி போலீஸில் புகார் அளித்தார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். போதை இளைஞர்களால் காவலர், அவரது மனைவியும் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக காவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


Crime: சீரியல் நடிகரை பிடிச்சிருக்கு.. காதலி மீது சந்தேகம்.. முன்னாள் காதலன் செய்த பயங்கரம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண