பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை நெட்ஃபிளிக்ஸ் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகவுள்ளது.


பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், உலகப் புகழ் பெற்ற படமான பைரைட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி தன் மீது தொடுத்ததால், தன்னிடம் இருந்த பட வாய்ப்புகளும் கை நழுவிப் போனது. கடந்த மாதத்தில் இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு இவருக்கு சாதகமாக வந்ததால்,  இவர் மீண்டும் நடிப்பார் என, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்ற வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவல், அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த படம் குறித்து வெளியான தகவலில், லா ஃபேவரெட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த படம் 1715 முதல் 1774 வரை பிரான்ஸை ஆட்சி செய்த பதினைந்தாம் கிங் லூயீஸ் பற்றிய வரலாற்றுப் படம். இப்படம் 2023ல் வெளியிடவுள்ளாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு உலகம் முழுவதும் ஸ்டிரீம் செய்யும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது.  இந்த தகவல் ஜானி தீப்பின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இருந்தாலும்,


டிஸ்னியின் மிக பிரம்மாண்ட தயாரிப்புகளில் ஒன்று  'பைரைட்ஸ் ஆஃப் தி கரீபியன்'.  இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திடத்துக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் ஜானி டெப் நடித்த கேப்டன் ’ஜேக் ஸ்பேரோ’ கதாப்பாத்திரத்திற்கு உலகம் முழுவதும் உள்ள சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளனர். 


இதுவரை மொத்தம் ஐந்து பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில், ஆறாவது பாகத்திற்காக உலக சினிமா வட்டாரமே காத்திருக்கிறது. ஆனால் ஆறாம் பாகத்தில் நடிக்கவிருந்த ஜானி தீப்ப்புக்கு அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது எனச் சொல்லலாம். அதாவது, 2018-ல் பத்திரிகை ஒன்றில் ஆம்பர் ஹெர்ட்  ஜானி தீப் பற்றி  எழுதியது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இதனால் அடுத்த பாகம் ஜானி தீப் நடிப்பை மிஸ் செய்தது.  தொடர்ந்து ஜானி தீப் நடிப்பதாக இருந்த 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் ஆறாவது பாகத்தில் இருந்து, அதன் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியால் நீக்கப்பட்டார். இதுமட்டுமில்லாமல், 'பேன்டஸ்டிக் பீஸ்ட்ஸ் 3' திரைப்படத்தில் இருந்தும் ஜானி நீக்கப்பட ஆம்பர் ஹெர்டின் கட்டுரை காரணமாக இருந்தது.  நீதிமன்றத்தில், படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கையைவிட்டுப் போக, ஆம்பர் தான் காரணம் என வாதாடினர்  ஜானி தரப்பு. இப்போது தீர்ப்புக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 


உலகமே எதிர் பார்க்கும் பைரைட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் ஆறாம் பாகத்தில் ஜானி தீப் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, டிஷ்னி ஜானி தீப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்ப்புக்குப் பின்னர் அவரது ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனி நிச்சயமாக ஜானி டெப் ஆறாவது பாகத்தில் நடிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கு நடந்தபோது, ”இனி 300 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாக கொடுத்தாலும் டிஸ்னியின் படங்களில் நடிக்க மாட்டேன் என ஜானி டெப் கூறியிருந்தார். 


தற்போது டிஸ்னி தனது தவறினை உணர்ந்து, ஜானி டெப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், மேலும் 301 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் எனவும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்திய மதிப்பில் ரூபாய் 2500 கோடிக்கும் அதிகம்.  இதனை ஜானி டெப் ஏற்றதாக அதிகாரப் பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.  ஆனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மீண்டும் பைரட்ஸ் ஆப் தி கரீபியன் பாகத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை ஏற்றாவது ”கேப்டன் ஈஸ் பேக்” என கரீபியனாக கடலை மீண்டும் ஆள்வார் எனவும்,  ஜானி தீப் சர்ப்ரைஸ் தருவார் எனவும் அனைவரும் எதிர் பார்த்து வருகின்றனர்.