விழுப்புரம்: மரக்காணம் அருகே வீட்டில் மர்மமான முறையில் வீட்டில் இறந்த நிலையில் கிடந்த பெண் சடலம், பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எம்.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு வயது (72) மற்றும் ஞானம்மாள் வயது (65) இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் உள்ளனர், ஞானம்மாள் பெயரில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இந்த நிலத்தை செல்லக்கண்ணுதான் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என கேட்டு இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஞானம்மாள் அவரது வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மரக்காணம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனை அறிக்கையில் ஞானம்மாளின் கழுத்து நெறிக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையில் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவரது கணவரான செல்லக்கண்ணுவை போலீசார் கைது செய்து விசாரித்த போது ஞானம்மாளை கயிறு மூலம் கழுத்தில் இறுக்கி கொலை செய்ததாகவும் அதை மறைப்பதற்காக மன்னனை ஊற்றி கொளுத்தியதாகவும், பின் அதிலிருந்து விடுபடவே தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்ததாகவும் தெரிவித்தார் இதனை அடுத்து மரக்காணம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் சொத்துக்காக சொந்த கணவனே தன் மனைவியை கொன்று எரித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப் மூலம் கடன்; ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - கண்ணீருடன் அரசுக்கு பெண் கோரிக்கை
மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?
Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்