காதல் விவகாரங்களில் ஒரு சில நேரங்களில் கொலை வரை சென்றுவிடுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. இளம் பெண் ஒருவரை அவருடைய 41 வயது காதலர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 22 வயது நடன கலைஞர் மேடி டிராண்ட். இவர் 41 வயதான பென் க்ரீன் என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பென் க்ரீனிற்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பென் க்ரீன் மற்றும் மேடி லவ் ஆஃப் ஐலாந்து என்ற படத்தை பார்த்துள்ளனர். அதில் வரும் ஒரு ஆண் நன்றாக உள்ளதாகவும் தனக்கு பிடித்துள்ளதாகவும் மேடி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.




இதன்பின்னர் காதலர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அடிக்கடி இருவரும் சண்டை செய்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து க்ரீன் உடனான காதலை முறித்து கொள்ள மேடி திட்டமிட்டுள்ளார். இது குறித்து அறிந்து கொண்ட க்ரீன் வழக்கம் போல் மேடியை சந்திக்க அவருடைய இல்லத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர்கள் இருவரிடமும் வாக்குவாதம் முற்றியுள்ளது. 


அப்போது க்ரீன் தான் கொண்டு வந்த கத்தியை வைத்து மேடியை மூன்று முறை குத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து க்ரீன் அதேவீட்டில் தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து பார்த்த போது வீட்டின் கீழ் பகுதியில் க்ரீன் சடலமாக மீட்கப்பட்டார். அதே வீட்டின் மேல் பகுதியில் மேடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஒருவர் அவரை கொலை செய்து கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண