மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சிறுபான்மை அணி பொதுச் செயலாளரும், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் உறுப்பினருமான முகமது ரியாஸ்தீன்.  இவர் ஆன்லைன் கடன் செயலி ( Loan app New case) மூலம் கடன் பெற தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அளித்துள்ளார். ஆனால், இவரின் ஆவணங்களை பெற்றுக்கொண்டு பணம் ஏதும் வழங்காத நிலையில், திடீரென அவரது செல்போனுக்கு அந்த செயலி மூலம் ஒரு அழைப்பு வந்தது.






அதில் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துமாறு கேட்டுள்ளனர். அதற்கு ரியாசுதீன் தங்களிடம் நான் பணம் பெறாமல் எவ்வாறு திரும்ப செலுத்துவது என கேட்டு பணம் செலுத்த முடியாது என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரின் படத்தை 'மார்பிங்' செய்து நிர்வாணமாக இருப்பது போல அவர் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 


Cheese Snacks : ஸ்நாக்ஸ் ஐடியா இல்லையா? சீஸ் பிடிக்குமா? பத்து நிமிஷத்தில் ஈவனிங் மொறுமொறு ரெடி..


தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் முகமது ரியாசுதீனை தொடர்பு கொண்டு, உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் இந்த படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவோம், என்றும், மேலும் உங்கள் செல்போன் காண்டாக்ட் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போதும், ரியாசுதீன் பணம் கொடுக்காததால், அவர் செல்போனில்  இருந்த நம்பர்கள் அனைத்திற்கும் ரியாசுதீனின் படத்தை மாப்பிங் செய்து ஆபாசமான படங்களை அனுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரியாசுதீன் இதுகுறித்து சீர்காழி  காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொண்டு தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இதுபோன்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்களை பெற்ற சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் லோன் மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ஆன்லைன் லோன் என்ற பெயரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் ஆபாச புகைப்படங்கள் அனுப்பப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண