75th Independence Day: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு தேசிய கொடியை ஏற்றுங்கள்- பிரதமர் மோடி

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டுக்கு வீடு தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continues below advertisement

பிரதமர் மோடி வேண்டுகோள்:

Continues below advertisement

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ம் தேதிக்கு இடையேயான நாட்களில், ஒவ்வொருவரின் வீடுகளிலும், தேசிய கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப் படுத்துங்கள் என்று மோடி கேட்டு கொண்டுள்ளார். 

1947ம் ஆண்டு -ஜூலை 22ம் நாளில்தான், அரசியல் நிர்ணய சபையால் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதையொட்டி, நேற்று தேசிய கொடி தொடர்பான தகவல்களை மோடி பகிர்ந்து கொண்டார். மேலும் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடி உள்ளிட்ட, வரலாற்றின் சில சுவாரஸ்யமான தகவல்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இந்த நினைவு நாளில், 75வது சுதந்திர தினத்தை நினைவுப்படுத்தும் விதமாக, ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ம் தேதிக்கு இடையேயான நாட்களில், ஒவ்வொருவரின் வீடுகளிலும், தேசிய கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப் படுத்துங்கள் என்று மோடி கேட்டு கொண்டுள்ளார்.  மூவர்ண கொடி இயக்கமானது, தேசிய கொடியுடனான, நாம் கொண்டுள்ள தொடர்பை ஆழப்படுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement