பெண்களை நிர்வாணமாக வீடியோ காலில் வரச்சொல்லி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் பெண் ஒருவருக்கு தகாத செய்திகளை அனுப்பியுள்ளார். தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து தனக்கு வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் வீடியோ கால்கள் வருவதாக அந்தப் பெண் போலீசாரிடம் புகார் கூறினார். மேலும், அந்த இளைஞர் பெண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.அந்த பெண் போலீசை அணுகி புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பெண்களின் கால்களை வெட்டி வெள்ளி கொலுசுகளை திருடும் சைக்கோ திருடர்கள்..!
குற்றம் சாட்டப்பட்டவர் தான் ஒரு சிஐடி அதிகாரி என்றும், நிர்வாண வீடியோ கால்களை செய்யுமாறும், அப்படி இல்லையென்றால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் அவரது எண்ணை பிளாக் செய்துள்ளார். வீடியோ காலில் நிர்வாண உரையாடல்: சென்னை வாலிபரை பங்கம் செய்த குஜராத் பெண்ணுக்கு வலை!
பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி குற்றவாளி கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அந்த இளைஞர் ஆபாசத்திற்கு அடிமையானவர் என்பதையும், பெண்களுடன் நட்பு கொள்ளவும், அவர்களுடன் நெருக்கத்தை வளர்க்கவும் சமூக ஊடகங்களில் பல தெரியாத பெண்களைக் குறிவைத்துள்ளார் என்று தெரியவந்தது. Vijay Visit Marakkar Set | அன்று அஜித்.. இன்று விஜயா? மரக்கார் ஷூட்டிங்கில் தல.. தளபதி? இன்று வீடியோ?!
அந்த இளைஞர் தனது முகத்தை மறைத்துக்கொண்டு தெரியாத எண்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால்களை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் எதிர்தரப்பில் உள்ளவர்கள் பெண்கள் என்பதை உறுதிசெய்து, பின்னர் அவர்களுக்கு தொடர்ந்து கால் செய்வார். அத்தகைய ஒரு சம்பவத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அழைப்பு விடுத்தார். அதுவே அவரைக் கைது செய்ய வழிவகுத்தது என்று போலீஸ் அதிகாரி கூறினார். Schools Holiday: விடாத மழை...நாளை எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடைமுறை தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்