ஆளும் கட்சித் தலைவர்கள் தனது மனைவியை தவறாக பேசியதாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.


நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்  சந்திரபாபு நாயுடு அடுத்த தேர்தலில் தனது கட்சி வெற்றிபெறும் வரை சபைக்கு திரும்ப மாட்டேன் என்று சபதம் செய்தார்.


இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஆளும் கட்சித் தலைவர்கள் தனது மனைவிக்கு எதிராக கூறிய சில கருத்துக்களைக் குறிப்பிட்டு கண்ணீர் விட்டு அழுதார். மேலும் இந்திய அரசியலில் நான்கு தசாப்தங்களாக தனது முழு வாழ்க்கையிலும், இதுபோன்ற கீழ்த்தரமான நடத்தையை தான் பார்த்ததில்லை என்றும் கூறினார்.


மேலும், எந்த பதிலும் இல்லாமல் முதல்வர் சிரித்துக் கொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டிய சந்திரபாபு நாயுடு, தனது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கீழ்த்தரமாக பேசியது  தன்னால் தாங்க முடியவில்லை என்றும் கூறினார். நாயுடுவின் மனைவி என்.டி.ராமராவின்  மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






கடந்த 18ஆம் தேதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டசபையில் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர், நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சியான தெலுங்கு தேசம் கட்சி சில இடங்களை இழந்துள்ளது. நலத் திட்டங்களின் கீழ், எந்த ஒரு திருட்டுத்தனமும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதால், நகரப் பெண்கள் அவருக்குப் பாடம் கற்பித்ததால், குப்பம் தொகுதி மக்கள் சந்திரபாபு நாயுடுவை ஒதுக்கி வைத்துவிட்டனர்” என்று கூறினார்.


நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து தனது கட்சிக்காரர்கள் யாரும் பேசவில்லை என்று கூறிய முதலமைச்சர், அதற்கு பதிலாக, தெலுங்கு தேசம் கட்சியினர் தான் தனது குடும்ப உறுப்பினர்கள், மறைந்த மாமா குறித்து பேசினார்கள் என்று கூறினார்.


முன்னதாக, மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை மாநிலங்களவைக்குள் நுழைய மாட்டோம் என்று தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களிடம் சந்திரபாபு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண