வெள்ளிக் கொலுசுகளைத் திருடுவதற்காக பெண்ணின் கால்களை வெட்டிய கொடூர சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள சார்புஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயல்வெளியில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல், கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. சம்பவத்தின் போது பெண் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசுகளைத் திருடுவதற்காக கொள்ளையன் ஒருவன் பெண்ணின் கால்களைத் துண்டித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். உயிரிழந்த பெண் கன்குபாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். Kerala Model Death: கேரளா மாடல் அழகிகள் விபத்தில் திருப்பம்: போதை கும்பலுக்கு தொடர்பு!
கடந்த திங்கட்கிழமை காலை கணவனுக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக கன்குபாய் தனது வீட்டிலிருந்து சென்றிருந்த போது இந்த கொலை நடந்துள்ளது.
கன்குபாய் தனது கணவர் வேலை செய்யும் வயலுக்கு வரவே இல்லை. வீடு திரும்பிய கன்குபாயின் கணவர் குழந்தைகளிடம் அம்மா எங்கே என்று கேட்டார். அம்மா வயலுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அதிகாலையில் கிளம்பினார் என்று குழந்தைகள் சொன்னார்கள்.POCSO | 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்சோ சட்டம் சொல்வது என்ன?
கன்குபாயின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் இரவு வரை தேடியும் பலனில்லை. இதையடுத்து சார்புஜா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்
கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இது முதல் முறையல்ல. ஜெய்ப்பூரில் சில நாட்களுக்கு முன்பு, வயலில் கால்நடை மேய்ச்சலுக்குச் சென்ற பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய கால்களும் துண்டிக்கப்பட்டு, அவரது வெள்ளிக் கொலுசுகளும் திருடப்பட்டன. வெள்ளி கொலுசுகளுக்காக பெண்கள் கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்படுகின்றனரா அல்லது வேறு எதாவது காரணத்திற்காக கொல்லப்படுகின்றனரா என்று தெரியவில்லை. Protest and Indian Democracy: போராட்டங்களே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்