ரியாலிட்டி ஷோ மட்டுமல்ல சீரியல்களுக்கும் சேனல்கள் கடும் போட்டா போட்டி நிலவுகிறது. அப்படித்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலுக்கு போட்டா போட்டியாக வரிசைக் கட்டி சீரியல்களைக் களமிறக்கத் தயாராகி உள்ளது கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ்.


விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பப்பட்டு மக்களின் மனதை அள்ளியிருக்கும் சீரியல் ‘முத்தழகு’. கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கிராமத்தின் மண் மணம் மாறாமல் உருவாக்கப்பட்டுள்ளத இந்த சீரியல் மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளது. 


இந்த சீரியலில் ஆசிஸ் என்பவர் கதாநாயகனாகவும் சோபனா என்பவர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.  மௌனராகம் நெடுந்தொடரில் நடித்த நடிகர் ஆனந்த் பாபுவும் இதில் நடித்துள்ளார்.


பேச்சி என்ற கதாபாத்திரத்தில் லட்சுமி வாசுதேவன் நடித்துள்ளார். நவம்பர் 15 ஆம் தேதி முதல் தினமும் பகல் 3.30 மணிக்கு இந்த சீரியல்ஒளிபரப்பாகி வருகிறது. 


விஜய் டிவியின் முத்தழகு மாஸ் காட்டுவதால், ஜீ தமிழும், கலர்ஸ் தமிழும் கலக்கத்தில் உள்ளன. இதனாலேயே ஜீ தமிழ் ‘பேரன்பு’ என்னும் புதிய சீரியலை வரும் நவம்பர் 29 முதல் ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த சீரியலில் நாயகி, நாயகன் யார் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை.


புதிதாக சீரியல் ஒன்று வரப்போகிறது என்ற தகவல்களை மட்டும் வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.





ஆனால், ‘பேரன்பு’ சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக ‘யாரடி நீ மோகினி’ சீரிய சீரியலின் நடிகர்களான ஸ்ரீ மற்றும் நட்சத்திரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


முத்தழகுக்குப் போட்டியாக ஜீ தமிழில் பேரன்பு சீரியல் அறிவிப்பு வெளியாகிய்ள்ளது என்றால் கலர்ஸ் தமிழ் சேனலும் புதிதாக ஒரு சீரியலை ஒளிபரப்ப போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


புதியசீரியலுக்கு ‘வள்ளி திருமணம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். ஆனால் இதிலும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரமும் ஒளிபரப்பாகும் நேரம் பற்றிய விபரமும் வெளியிடவில்லை. சீக்கிரமாகவே ப்ரோமோ வெளியாகும் என்று மட்டும் கூறியுள்ளனர்.


இந்தப் போட்டாப் போட்டியில் யாருடைய டிஆர்பி எகிறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


முன்பெல்லாம், சீரியல் பற்றிய ஜோக்குகள் எழுதும் போது இரவு நேர சாப்பாட்டுக்காக காத்திருக்கும் குடும்பம் பற்றி குறிப்பிடுவார்கள். ஆனால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என வரிசை கட்டி தொலைக்காட்சிகள் காலை 10.00 மணி முதல் இரவு 11 மணி வரை சீரியல் ஒளிபரப்புகின்றன.