மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கேசிங்கன் கிராமத்தை சேர்ந்தவர் 36 வயதான சண்முகப்பிரியா. இவர் வக்கிர மாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சண்முகப்பிரியா கொள்ளிடத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் (ஸ்கூட்டி) சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது வைத்தீஸ்வரன்கோயில் அருகே பிரதான சாலையான அட்டகுளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சண்முகப்பிரியாவின் பைக் மீது மோதி கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிதிருந்த 7 சவரன் தாலி செயினை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதில் நிலை தடுமாறி சண்முகப்பிரியா கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சண்முகப்பிரியா வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்பத்தியுள்ளது.
Madras Day 2022: பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியின் மையமாக சென்னை மாறியது எப்படி?
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு குற்ற சம்பவம்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் ஆற்று நீர் கிராமத்தை சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த கிராமமக்கள் அனைவரும் தங்கி இருந்தனர்.
முகாம்களில் உள்ளவர்களுக்கு உரிய கழிப்பறை வசதி இல்லாததால் கழிவறைகள் கட்டித் தர வேண்டும் என்று முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற சுற்றுச்சூழல் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நடவடிக்கை எடுத்ததன் பேரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு அறைகள் அடங்கிய கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டது.
வெள்ள நீர் கிராமத்திலிருந்து வடிந்துள்ள நிலையில் முகாமில் இருந்தவர்கள் மீண்டும் நாதல்படுகை கிராமத்துக்கு சென்று விட்டனர். இந்நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கழிப்பறையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Watch Video : ராயல் என்பீல்டில் ஆபத்தான பயணம்...! ஒற்றையடி பாலத்தில் சாகச ரைட்..! வைரல் வீடியோ..!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற