மாஸ்டர் படத்தின் காம்போ விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் மீண்டும் தளபதி67 படத்தை இணைந்து இயக்கவுள்ளனர்.


லோக்கேஷ் கனகராஜ் இப்படத்தின் திரைக்கதையை எழுதிவருகிறார். இதை சிறப்பாக எழுதவே அவர் சோஷியல் மீடியாக்களுக்கு சிறிது நேரம் டாட்டா பாய் பாய் சொல்லியிருந்தார். தற்போது புதிய அப்டேட்டாக,  இப்படத்தில் பாடல்களே இடம் பெறாது என்ற தகவல் வந்துள்ளது.


இப்படமானது பக்காவான ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் நிலையில், பாடல்கள் இடம் பெறாமல் வெறும் பின்னணி இசை இடம்பெறும் என்றும் சொல்லப்படுகிறது. லோகேஷின் கைதி படத்தில் ஒரு பாடல் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.






முன்னதாக,  ஒரு நேர்காணலில் “தமிழ் கலாச்சாரம் பாடல்களுடன் ஒன்றி இணைந்தது அதனால்  வாழ்விலிருந்தும் படங்களிலிருந்தும் பாடல்களை பிரிக்க முடியாது. கைதி போன்ற படத்தில் பாடல்களுக்கு அவசியமில்லை ஆனால் போர் கொண்ட சிங்கம் பாடல்  விக்ரம் படத்தில் தேவைப்பட்டது அதனால் அதில் பாடல் இருந்தது.” என்று லோக்கி கூறியிருந்தார்.


தளபதி67 படத்திற்கு யார் இசையமைக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனால் மாஸ்டர் மற்றும் விக்ரம்  படத்திற்கு இசையமைத்த அனிரூத் அல்லது கைதி படத்திற்கு இசையமைத்த  சாம்.சி.எஸ் இசையமைக்கலாம்
என்றும் பேச படுகிறது. படத்தின் குழுவினர்கள், திரையுலகில் உள்ள பிரபலமான நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இப்போதுவரை, சமந்தா மற்றும் த்ரிஷா நடிக்கவுள்ளனர் என்ற தகவலும் வந்தது.






அதுபோக விஜய்க்கு எதிராக மொத்தம் 6  வில்லன்கள் நடிக்கவுள்ளனர்.வாரிசு படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன்
தளபதி 67 படத்திற்கான அதிகாரபூர்வமான தகவல் வெளியாகலாம். வாரிசு படத்தின் இறுதி கட்ட ஷூட் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு முடியலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


நடிகர் விஜய் ஹைதரபாத்தில் உள்ள தியேட்டரில் இருந்த போது அங்கு கூட்டம் குவிந்தது.அந்த போட்டோவும் சமூக வலைதளத்தில் வைரலானது.