சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். சிலர் தங்களது சாகசங்களையும், சிலர் தங்களது திறமைகளையும், சிலர் அங்கங்கே நடக்கும் இயல்பான விஷயங்களையும் வீடியோக்களாக தங்களுடைய சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம்.

Continues below advertisement


இந்த நிலையில், ராயல் என்பீல்ட் மூலம் உடைந்து போன பாலத்தை ஒரு நபர் ஆபத்தான முறையில் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரிஷ் ராஜ் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.




அதாவது, ஆற்றின் நடுவே கட்டப்டட்ட ஆற்று தரைப்பாலம் வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதில், தரைப்பாலம் முழுவதும் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், தரைப்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் மட்டும் ஆற்றில் அடித்துச்செல்லப்படாமல் உள்ளது.





அப்போது, எதிர் திசையில் ராயல் என்பீல்டில் உள்ள நபர் ஒருவர் தன்னுடைய ராயல் என்பீல்ட் மூலம் ஆபத்தான முறையில் அந்த பக்கவாட்டுச் சுவரை கடக்கிறார்.


அவரது இந்த ஆபத்தான சாகச பயணத்தை எதிர்முனையில் உள்ள ஒரு நபர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். ஹரிஷ் ராஜ் என்பவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவிற்கு கீழே பலரும் ராயல் என்பீல்ட் ஓட்டியவரை பாராட்டியும், பலரும் இது ஆபத்தான செயல். இந்த செயலை பின்பற்றி சிலர் ஆபத்தான முறையில் பயணிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க : Krishna Jayanthi 2022: கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து!


மேலும் படிக்க : ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!