வந்தியத்தேவன் கேரக்டருக்காக தான் எப்படி தயாரானேன், அந்தக் கேரக்டர் எப்படி இருக்கும் என்பது குறித்து நடிகர் கார்த்தி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். 


பேட்டி ஒன்றில் கார்த்திக்காக வீடியோ வழியாக பேசிய செல்வராகவன், “  ஆயிரத்தில் ஒருவன் முத்து கேரக்டரின் சாயல் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் கேரக்டருக்கு இருக்கும். நாங்க அந்த கேரக்டரை கொஞ்சம் மாத்தி பண்ணிருந்தோம். கார்த்தி எப்போது ரெடி என்று சொல்கிறாரோ அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 வேலைகளை ஆரம்பிக்கலாம்” என்றார். 




வந்தியத்தேவன் கேரக்டர் பற்றி பேசிய கார்த்தி, “ வந்தியத்தேவன் எல்லோருடனும் பழகக்கூடிய கேரக்டர். அவனுக்கு நிறைய ஆசைகள் இருக்கும். அந்தக்காலத்தில் சாதரண மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு பெரிதாக ரெபரன்ஸ் கிடையாது. அதனால் அப்போது இருந்த மனிதர்கள் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தது. காரணம் சங்கப்பாடல்களில் கூட, ராஜா, இளவரசிகளைப் பற்றித்தான் இருக்கும். அப்போதுதான்  ‘சங்கம் பாலிட்டி’என்ற புத்தகத்தை கொடுத்தார்கள். அதில் நிறைய டிஸ்கிரிப்ஷன்ஸ் இருந்தது.




அதில் சாமானிய மக்கள் பற்றிய விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அவையெல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகம் இருந்தது. அந்தப்புத்தகத்தில் அப்போதைய மனிதர்கள் சார்ந்த பல விவரங்கள் இருந்தன. அதையெல்லாம்  தெரிந்து, புரிந்துகொண்ட பின்னர்தான் வந்தியத்தேவன் கேரக்டரை செய்திருக்கிறேன். நான் மிகவும் சந்தோஷமாக இந்த கேரக்டரை செய்தேன்” என்றார்.


வந்தியதேவன் டயலாக்


மேலும் பேசிய அவர் ‘  “தோற்க வேண்டிய இடத்தில் தோற்க தயாராக இருப்பவை யாரால் ஜெயிக்க முடியும்” அதுதான் வந்தியத்தேவன் என்றார்.


ஆயிரத்தில் ஒருவன் 2  கார்த்தி அளித்த பதில் 


ஆயிரத்தில் ஒருவன் 2 விற்கு பதிலளித்த கார்த்தி “ தெரியவில்லை நிறைய படங்கள் இருக்கிறது. இன்னொன்று ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த வலி இன்னும் ஆறவில்லை. ஆறும் போது செய்யலாம்” என்றார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான அந்த சம்யத்தில் பெரிதான வரவேற்பை பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக படத்தில் இருந்து  ‘பொன்னி நதி’  பாடல் வெளியிடப்பட்டு இருந்தது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்தப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்த பாடலான ‘ சோழா சோழா’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லரானது சென்னையில் செப் 6ம் தேதியும், ஐதராபாத்தில் 8ம் தேதியும் நடைபெறுகிறது. பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 


 ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


 






ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது.


தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியானது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, ஜெயராம், ஜெயம்ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத்தொடர்ந்து அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.


கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும்  முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம்  டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க  3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்