தமிழ்நாட்டில் பக்தர்களைவிட சாமியார்கள் அதிகம் உருவாக தொடங்கியிருக்கிறார்கள். இந்த நடைமுறை தமிழ்நாட்டில் வழக்கமானதுதான் என்றாலும் சமீபமாக பெண் சாமியார்களும் உருவாக ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்படி சமீபத்திய வைரல் அன்னபூரணி. அவரது அவதாரம் குறித்த பேச்சு அடங்குவதற்குள் திண்டுக்கல்லில் ஒரு பெண் சாமியாரின் அவதாரம் உருவாகியுள்ளது. ஆனால்லந்த அவதாரமானது 60 பவுன் நகை, 5 லட்சம் பண மோசடியில் சிறைக்கு சென்றுள்ளது.
திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசிப்பவர் பபிதா என்ற பவித்ரா. 42 வயதான இவர் தன்னை காளி என கூறிக்கொண்டு திண்டுக்கல்லில் உள்ள பல லாட்ஜ்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவந்தார்.
இந்த சூழலில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம், கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ 5.50 லட்சம் மற்றும் 60 சவரன் நகையை காளி பவித்ரா பெற்றிருக்கிறார். ஆனால் சொன்னபடி நிலத்தை காளி வாங்கி தரவில்லை.
இதனையடுத்து சக சாமியார் மீது ஆண் சாமியார் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான பவித்ராவை தேடிவந்தனர்.
இந்த சூழலில், ஆரோக்கியமாதா தெருவில் இருக்கும் அவரது வீட்டில் பதுங்கியிருந்த பவித்ராவையும், அவரது தங்கையான ருப்பாவதியையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Video | Bulli Bai App | ஆன்லைனில் பெண்கள் ஏலம்.. நேபாள் மாஸ்டர் மைண்டின் ஆர்டர்..இளம்பெண் கைது..போலீஸ் சொன்ன குடும்பக்கஷ்ட கதை..
யோவ்! கடனை கட்டிட்டு செத்துப்போயா ! விவசாயியை மிரட்டிய பெண் ஊழியர்..வைரலாகும் ஆடியோ பதிவு!