நானே கடவுள், நானே அவதாரம், நானே ஆதிபராசக்தி என ஆர்ப்பரித்த அன்னபூரணி அரசு அம்மா, ஊருக்கெல்லாம் பாதுகாப்பு வழங்குவேன் என்ற கூறி வந்த நிலையில், தனக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

ஜனவரி 1 ம் தேதி செங்கல்பட்டில், ஆன்மிக அருள் பயணத்தை மெகா பயணமாக துவக்கவிருந்த அன்னபூரணிக்கு, ஏற்கனவே எண்ட் கார்டு  போடப்பட்ட நிலையில், தனக்கு இந்து அமைப்புகளிடமிருந்து வந்த எதிர்ப்பை தொடர்ந்து, இனி ஆதிபராசக்தி என்கிற பெயரை பயன்படுத்த மாட்டேன் என்றும், அம்மா என்கிற பெயரை மட்டுமே பயன்படுத்துவேன் என்றும் அறிவித்தார். இந்நிலையில் 2021 அக்டோபர் 29ம் தேதி அவர் பேசிய வெளியிட்ட வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. அதில் இந்துக்களின் தெய்வ நம்பிக்கையை அவமதிக்கும் விதமான பேச்சுகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய ஆன்மிக தலங்களான ராமேஸ்வரம், காசி, திருப்பதி சென்று வழிபாடு நடத்துவதை கடுமையாக விமர்சித்துள்ளார். இதோ அவரது ‛இறைவனின் அருளை பெறுவது எப்படி’ என்கிற அந்த வீடியோவில் உள்ள அவரது பேச்சு... 

‛‛இறைவன் அருளை பெற பொங்கல் வைப்பது, கிடா வெட்டுவது, அலகு குத்துவது, தீ மிதிப்பது, காவடி எடுப்பது, தர்ம காரியங்கள் செய்வதாலும், கோயில் கட்ட இடம் கொடுப்பது, பெரிய தொகை நன்கொடை கொடுத்தால் இறைவன் அருள் கிடைப்பதாக நினைக்கிறீர்கள். அது உண்மைஅல்ல. இதற்கும் இறை அருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தெய்வத்திற்கு செய்வதாக நினைத்து நீங்கம் செய்பவை, ஆணவமே. நல்ல காரியம் செய்வதா நினைத்து, நீங்கள் இந்த காரியத்தில் ஈடுபடுறீங்க. இறை அருள் அதனால் கிடைக்காது. 


கிரிவலம் போனால் அருள் கிடைக்கும் என நினைக்கிறார்கள். காசி, ராமேஸ்வரம் போனால் புண்ணியம் என நினைக்கிறார்கள். இதெல்லாம் தவறான புரிதல். திருப்பதில் லட்சம் லட்சமாக பணத்தை கொட்டினால் தான், பெருமாள் அருள் கிடைக்கும் என நினைப்பவர்கள், தன் வியாபாரத்திற்கு ஒரு பார்ட்னரை தேடுபவர்கள். இறைத் தன்மை இல்லாத இடமில்லை. அதை நீங்கள் தான் உணரவில்லை. 

இதோ அந்த வீடியோ...


ராமேஸ்வரம் சென்று மன அமைதி கிடைத்ததாக நீங்கள் நினைத்தால், அது மன பிரம்மை. அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறது; நீங்கள் வீட்டை பூட்டி உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். எப்படி உங்கள் மீது மழை விழும். 

இன்னொருத்தர், மழையில் நனையாமல், குடையை பிடித்துக் கொண்டும், ரெயின் கோர்ட் போட்டுக் கொண்டும் பாதுகாப்பதாக நினைத்து அருளை பெறாமல் சென்று கொண்டிருக்கிறீிர்கள். உங்களிடம் இருக்கும் இறையருளை முதலில் உணருங்கள். வாழ்க்கை கொண்டாட தரப்பட்டது; அதை வீணடிக்காதீர்கள். இறையருளை பெருங்கள்,’’

என்று அவர் பேசியுள்ளார்.


 

 

 

Hindu deities criticizing Video