விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான ரகோத்தம்மன். இவரது முழுப்பணி இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.விவசாயியாக இருந்து வரும் இவர் இந்திய விவசாய முன்னேற்ற சங்க மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 


இந்தநிலையில், விவசாயி ரகோத்தம்மன் திருவெண்ணெய் நல்லுாரில் உள்ள தேசிய வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் விவசாய கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடனை வசூலிக்க, நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் ரிலையன்ஸ் ஏர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவர், ரகோத்தம்மனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கடனை கேட்டுள்ளார். 


அப்பொழுது பெண் ஊழியர் அந்த முதியவரை யோவ் என்றும், கடனை கட்டிட்டு செத்துபோங்க என்று மிரட்டிய ஆடியோ பதிவு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் முதலில் அந்த பெண் ஊழியர், ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி.,யில் இருந்து பேசுறேன் சார். நீங்க பேங்க்ல லோன் எடுத்து இருக்கீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும் படிக்க :TN Assembly Session: சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து அ.தி.மு.க., வி.சி.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு - ஏன் தெரியுமா..?


அதற்கு அந்த விவசாயி, குறிப்பிட்ட வங்கி பெயரை சொல்லி அதில் லோன் எடுத்து இருக்கேன். உங்களுக்கு என்ன? என்று கேட்டுள்ளார். தொடர்ந்து பேசிய ஊழியர், ஏன் உங்களுக்கு சொல்லலையா, உங்க பேங்க்ல ரிலையன்ஸ்க்கு பார்வர்டு பண்ணிட்டாங்கன்னு என்றார். சந்தேகமடைந்த விவசாயி, அது எப்படி அந்த பேங்க்ல கடன் வாங் குனா ரிலையன்சுக்கு பார்வர்டு பண்ணுவாங்க. யார் கடன் கொடுக்கிறது. யார் கேட்கிறது ? என்று கேள்வி கேட்டார்.




 ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஊழியர், யோவ் நான் தான்யா கால் பண்ணனும். பேங்க்குக்கு வா. முதல்ல இந்த சட்டம் எல்லாம் பேசிட்டு இருக்காத,செத்தாக் கூட பரவாயில்லை கடன் கட்டிட்டு செத்து போங்க என்று மிரட்டியுள்ளார். 


பெண் ஊழியர் பேசிய ஆடியோ பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பலரும் தற்போது அந்த நிறுவனம் மற்றும் அந்த பெண் ஊழியருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


Watch video : அஷ்வின் போல் பந்துவீசிய பும்ரா... அசந்துபோய் வேடிக்கை பார்த்த இந்திய ரசிகர்கள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண