கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்தவர் ராமன்ரகு (48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா (46). கடந்த 22ஆம் தேதி இரவு 2 பேரும், பழனிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று, சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ராமன்ரகு, உஷா தங்கியிருந்த அறையின் கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள், பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


ஆளுநரிடம் இபிஎஸ் புகார் மனுக்களை அளித்திருப்பது நாடகம்... விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு


அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விடுதி அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராமன்ரகு, உஷா ஆகிய 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


CM Stalin : தமிழகம் முழுவதும் சாலைகள் செம்மையா இருக்கனும்; ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!


பின்னர் அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு உஷா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில்,  தாங்கள் சொந்த ஊரில் கடன் தொல்லையால் மனஉளைச்சலில் இருந்து வந்தோம். மேலும் ஊரில் 7 குடும்பத்தினர் எங்களை வேண்டுமென்ற ஒரு வழக்கில் சிக்க வைத்துவிட்டனர். எனவே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். எங்களது 13 வயது மகன், 9 வயது மகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று உஷா எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தலைமை தேர்தல் ஆணையர்களின் சுதந்திரத்தை அழிக்கிறீர்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!


செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கும் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்


மேலும் விடுதி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தபோது, நண்பகல் 12 மணி அளவில் ராமன்ரகு-உஷா தம்பதியை பார்த்ததாகவும், அதன்பிறகு அவர்களை பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர்கள் 12 மணிக்கு பிறகு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கேரளாவில் உள்ள ராமன்ரகுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தபிறகே தம்பதி தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் கூறினர். தங்கும் விடுதியில் கேரள தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண