திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகே பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று இவர் ஒரு வேலையாக திண்டுக்கல் சென்று விட்டு மீண்டும் வேடசந்தூருக்கு ஒரு தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழைந்த போது, பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் பூக்கடை ராதாகிருஷ்ணன் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு அனைவரையும் இடித்து தள்ளி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.


Congress: காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கிய வருமானவரித்துறை; ராகுல் காந்தி கண்டனம்




பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டி பிடிக்க முயன்றபோது செல்போனை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். ஆனாலும் அந்த பகுதி இளைஞர்கள் அவரை துரத்தி சென்றதால், அந்த வாலிபர் குடகனாற்றில் இறங்கி ஓடி ஆத்து மேடு பகுதிக்கு தப்பிச்சென்றார். அங்கு அவரை பொதுமக்கள் துரத்திச் சென்று சுற்றி வளைத்து, தர்ம அடி கொடுத்து வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்தேன் காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.


Siren Review: தமிழ் சினிமா தொடாத கதை.. ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!




 


அதில் அவர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குமார்(வயது 27) என்பதும் கடந்த மூன்று ஆண்டுகளாக வடமதுரையில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமதுரை பகுதியில் துவைத்து காயப்பட்ட துணிகளை திருடிச் சென்றதும், அதன் பின்னர் அவரை பிடித்து வடமதுரை போலீசார் எச்சரித்து அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்தில் பயணம் செய்த முதியவரின் செல்போனை வாலிபர் பறித்துச் சென்ற சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.