சென்னை அம்பத்தூரில் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி (42). அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றிய நபரின் வாயிலாக மதுராந்தகத்தைச் சேர்ந்த சுரேஷ் (51) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. டெய்சி அவருக்கு மகளிர் குழு வாயிலாக கடன் வாங்கி கொடுத்துள்ளார். அவர் பணத்தை சரியாக செலுத்தாததால் டெய்சி அவரை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் சுரேஷ் மொத்த பணத்தையும் கட்டுவதாக கூறி, சோழவரம் பெரியார் நகரில்தான் தங்கியுள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், டெய்சிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சுரேஷ் அவரை பாலியல் வன்கொடுமை செய்து, அதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பின், அதை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு டெய்சி மறுக்கவே வீடியோவை டெய்சியின் மகனுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து டெய்சி கடந்த 5-ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, " சுரேஷ் எனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பணமும் கேட்டு மிரட்டினார். அதற்கு மறுத்ததால் அந்த வீடியோவை எனது குடும்பத்தினருக்கு அனுப்பினார். எனவே சுரேஷ் குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வாங்கிய கடனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொத்த தவணையையும் செலுத்தி விடுவதாகவும், நேரில் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார். இதனால் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றேன். அப்போது சுரேஷ்குமார், எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக” புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் , ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த சுரேஷை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Ration Rice Smuggling: ரேசன் அரிசி கடத்தல்; முக்கிய புள்ளிகள் விரைவில் கைது - செயலாளர் ராதாகிருஷ்ணன்
Crime: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி... ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!