விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் சொந்த மகனே பணம் பறிக்க கடத்தல் நாடாகமாடுவார். அதுபோல சென்னையில் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 22 வயதுடைய பெண் ஒருவர் இதை செய்துள்ளார். அதன்படி, வியாசர்பாடியை சேர்ந்த அந்த இளம்பெண் நேற்று முன்தினம் தனது தாயின் தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட அவர், தன்னை பூவிருந்தவல்லியில் கடத்தியதாகவும், ரூ. 50 ஆயிரத்தை நேரில் வந்து கொடுத்தால் மட்டுமே தன்னை விடுவிப்பதாக மிரட்டுவதாக தனது தாயிடம் செல்போனில் கூறியுள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாயார், பூவிருந்தவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இளம்பெண் பேசிய எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது, அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போலீசார், எதிர்தரப்பில் பேசிய மர்ம நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் மீதுகு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


இந்த நிலையில், வண்டலூர்-மீஞ்சுர் சாலையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டனர். அப்போது அந்த இளம்பெண் கூறியதாவது, கோயம்பெட்டில் நின்று கொண்டிருந்தபோது தன்னை ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை கடத்தியதாகவும் பணம் கேட்டும் மிரட்டினர். பின்னர் தன்னை இங்கு இறக்கிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.   


பின்பு  அப்பகுதியில் சிசிடிவி கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணும், அவருடன் அவரது நண்பர்கள் 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரும் டீக்கடையில் நின்று டீக் குடித்து விட்டு சென்றதும், பின்பு அந்த இளம்பெண்  தனியாக ஒருவரிடம் செல்போனில் பேசியதும் சிசிடிவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.  அப்போது அந்த இளம்பெண் உண்ணையை ஒப்புக் கொண்டார். பின்னர் போலீசார் அவரது நண்பர்கள் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime: தங்கைக்கு ஆபாச மெசேஜ்... எச்சரித்த சகோதரர்..! வெட்டிக்கொன்ற அண்ணன், தம்பிகள்..! அதிர்ச்சி சம்பவம்!


Crime: நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட நடிகை; நாடகமாடிய கணவர் கைது...! நடந்தது என்ன..?


சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற வழக்கில் ஜோனாதன் தோர்னுக்கு 2 ஆண்டுகள் சிறை