திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்டு RM காலனி பகுதி உள்ளது. அங்குள்ள இரண்டாவது கிராஸ் பகுதியில் குடியிருந்து கொட்டகை தொழில் செய்து வருபவர் வீரபத்திரர் என்பவரது மனைவி மாரியம்மாள். இவருக்கு அங்குசாமி என்ற மகன் உள்ளார். அங்குசாமியும் கொட்டகை தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீரபத்திரன் உயிரிழந்து விட்டார். அதனால் அங்குள்ள வீட்டில் மாரியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.


TN Govt Reward: விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


 



காலை மற்றும் மாலை வேளையில் தனது அம்மாவை பார்ப்பதற்காக மகன் அங்குசாமி வருவது வழக்கம். இன்று பகலில் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து மாரியம்மாள் அணிந்திருந்த நகைக்காக அவரை கத்தியால் குத்தி நகையையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.


150 மோமோஸ்களை ஒரே நேரத்தில் சாப்பிடும் சவால்... சோகத்தில் முடிந்த சேலஞ்... என்ன நடந்தது?


இந்த சம்பவத்தால் மாரியம்மன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார்.  இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலை அறிந்ததும் விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான காவல்துறையினர் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.



Actor Karthi: படிப்ப மட்டும் விட்டுடாத சிதம்பரம்.. வீட்டில் ஒருவர் படித்தால் தலைமுறையே முன்னேறும் - நடிகர் கார்த்தி


தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப் பகலில் குடியிருப்பு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண