விளையாட்டு போட்டிகள் பொழுதுபோக்கு என்ற ஒரு விஷயத்திற்காக பார்க்கப்பட்டாலும், பணம் சம்பாத்தியத்தில் அது கடவுள் போல் காட்சியளிக்கிறது. வெற்றி பெறும் நபர்களுக்கு பணமானது கோடி கோடியாக கொட்டப்பட்டு வருகிறது. 


கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் வெற்றியாளர்களின் பரிசுத்தொகையை விட உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில் வெற்றி பெறுபவர் பெற்ற பரிசுத் தொகை அதிகமாக உள்ளது. இந்தாண்டு முதல் விம்பிள்டன் 2023 தொடரின் பரிசுத் தொகை 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட்டின் வளம் சொழிக்கும் தொடராக பார்க்கப்படும் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை வென்றவர்கள் பெற்ற பரிசுத் தொகையை விட விம்பிள்டன் பரிசுத்திகை அதிகம். 






விம்பிள்டன் 2023 ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 வயதான கார்லோஸ் அல்கராஸ் உலக புகழ்பெற்ற நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டத்தை வென்றார். வெற்றிக்கு பிறகு, கார்லோ அல்கராஸுக்கு சுமார் 25 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதே நேரத்தில், இரண்டாம் இடத்தை பிடித்த நோவக் ஜோகோவிச்சிற்கு ரூ. 12. 25 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 






இந்தியன் பிரிமீயர் லீக் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் ஆனபோது, அவர்களுக்கு சுமார் ரூ. 20 கோடியை பெற்றனர். இந்த 20 கோடியை ஒட்டுமொத்த அணிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதேபோல், இரண்டாம் இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.13 கோடி வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு 13.05 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 6.5 கோடியும் வழங்கப்பட்டது.


ஆஸ்திரேலிய ஓபனும், யுஎஸ் ஓபனும்... 


விம்பிள்டனை தொடர்ந்து 3 பெரிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் இந்த ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்ற வீரருக்கு ரூ. 20 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியன் ஓபன் 2023ல் ஒற்றைப் போட்டியில் வென்றவருக்கு ரூ.16.73 கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகையும், பிரெஞ்ச் ஓபன் 2023ல் ஒற்றைப் போட்டியில் வென்றவருக்கு ரூ.20.58 கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.