பீகார் மாநிலத்தில் நண்பர்களின் சவாலை ஏற்று ஒரே நேரத்தில் 150 மோமோக்களை சாப்பிட முயன்ற நபர் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிக்கும் போடே தரையி சரிந்து விழுந்து உயிரிழந்தார். 


பீகார் மாநிலம் கோபால்கஞ் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தன் நண்பர்கள் செய்த சேலஞ்சை ஏற்று ஒரே நேரத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட முயன்றுள்ளார். அவர் தொடர்ந்து மோமோக்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சுயநினைவை இழந்து உயிரிழந்தார். விசாரணையில் அந்த நபர் தாவே காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிஹோர்வா கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார் மஞ்சி (25) என தெரிய வந்தது.


அவர் செல்போன் ரிப்பேர் பார்க்கும் கடை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் மோமோஸ் சாப்பிடும் சேலஞ்சை ஏற்று விபின் குமார் மஞ்சி மோமோஸை சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்து கீழே சரிந்துள்ளார்.


இது தொடர்பாக விபின் குமார் மஞ்சியின் நண்பர்கள் மற்றும் கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.