மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்கரையோர பகுதியில், சட்ட விரோதமாக குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த குழந்தைகள் காப்பகமானது, பெத்தல் சர்ச்சால் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


குழந்தைகள் மீட்பு:


இந்நிலையில், காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த குற்றச்சாட்டானது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு வந்ததையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது.


பின்னர், சட்ட விரோதமாக நடத்தப்பட்ட குழந்தைகள் காப்பகத்திலிருந்து 45 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த காப்பகமானது, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.