Crime : மத்திய பிரதேசத்தில் 63 வயது முதியவர் 3 பேருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதை மற்றவர்களுக்கு தெரிவித்ததாக, அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜம்பல்பூர் பகுதியில் 63 வயதான முதியவர் ஒருவர் 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தினமும் 42 வயதான நபர் மற்றும் 25 வயதுக்குட்பட்ட இரண்டு பேரை அந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு, இவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அந்த முதியவர் மற்றவர்களிடம் தெரிவித்தார். இதற்கு ஆத்திரமடைந்த 3 பேர் இவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்பு
இந்நிலையில், அந்த முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அந்த முதியவரை 3 பேர் சேர்ந்து இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்து அவரை கொலை செய்துள்ளனர். பின்பு அவரை ஜம்பல்பூர் பகுதியில் உள்ள பண்ணை அருகில் வீசியுள்ளனர். பின்பு, நவம்பவர் 9-ஆம் தேதி ஜம்பல்பூர் பகுதியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் அகர்வால் கூறுகையில், நவம்பர் 9-ம் தேதி விவசாய நிலத்தில் ஆண் சடலம் ஒன்று பண்ணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் முதியவர் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம் என்றார். மேலும், விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 42 வயது மற்றும் இருவர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து செக்ஸ் ஸ்பிரே, மாத்திரைகள் மற்றும் எண்ணெய் பாட்டில்கள் ஆகியவை மீட்கப்பட்டது. இதையெல்லாம் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், முதியவர் தங்களுடன் இயற்கைக் மாறான உடலுறவு வைத்திருந்ததாக தெரிவித்தனர். அவர் செய்த செயலைப் பற்றி மற்றவர்களிடம் கூறியதால் அவர்கள் மனமுடைந்து அவரைக் கொன்றனர் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
Crime: 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 5 பள்ளி சிறுவர்கள்..! தெலங்கானாவில் கொடூரம்