சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் பெண்கள் பாதிரூமில் ரகசிய துளை போட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 


சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று நுங்கம் பாக்கம். இங்குள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி பாத்ரூம் உள்ளது. இதனை இங்கு பணி புரிபவர்களும், இங்கு வரும் வாடிக்கையாளார்களும் பயன்படுத்துவது வாடிக்கை. 


இந்நிலையில், நேற்று முன்தினம், இந்த வணிக வளாகத்தில் பணியாற்றும் ஒரு தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் பாத்ரூமுக்குச் சென்றுள்ளார். அப்போது, பாத்ரூம் சுவரில் எளிதில் யாருக்கும் தெரியாத வகையில் ஒரு சிறிய துளை இருந்ததை அவர் கவனித்துள்ளார். அதனை நன்கு உற்று நோக்கிப் பார்க்கையில், அந்த துளைவழியாக யாரோ எட்டிப் பார்ப்பது தெரியவந்துள்ளது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர், கூச்சலிட்டுள்ளார், உடனே அருகே இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு என்ன ஆனது என்று விசாரிக்கையில், பாத்ரூமில் சிறிய துளை உள்ளதையும், அந்த வழியாக யாரோ பார்ப்பதாகவும் கூறி அழுதுள்ளார். அப்போது, ஆண்கள் பாத்ரூமில் இருந்த  திடீரென தப்பி ஓடுவதுபோல் ஓடியுள்ளார். உடனே அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், விசாரித்துள்ளனர். 


விசாரித்ததில், அவர் அதே வணிக வளாகத்தில் பணிபிரியும் அசோக்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவேதான், வேலை முடிந்ததும், வீட்டிற்குச் செல்லாமல், ஆண்கள் பாத்ரூமில் இருந்து சிறிய துளை போட்டு அதனை, சோப்பினைக் கொண்டு மூடியதாகவும் கூறுயுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக தனக்கு விருப்பமான பெண்கள் பாத்ரூமை பயன்படுத்திவருவது தெரிந்தால், அவர்களை அந்த ரகசிய துளை வழியாக பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அந்த நபரை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், விசாரித்ததில் அசோக்குமார், சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர், வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக குற்றத்தினை செய்து வந்ததை  ஒப்புகொண்டுள்ளார். இதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றவாளி அசோக்குமாரின், செல்போனை கைப்பற்றி, குற்றவாளி தனது செல்போனில் எதாவது வீடியோ பதிவு செய்து யாரையாவது மிரட்டியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.