பஞ்சாப்பில் குறுகிய தெருக்களில் ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படக் காட்சி போல் கார் ஓட்டிச்சென்ற இரண்டு பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்த பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் இந்தத் திரைப்பட பாணியிலான சம்பவம் நிகழ்ந்துள்ளது.


வெள்ளை நிற மாருதி சுஸுகி டிஸையர் (Maruti Suzuki Dzire) காரில் சென்ற இரண்டு பேர், காவல் துறையினர் வண்டியை நிறுத்தக் கோரியபோது நிற்காமல் சென்றுள்ளனர். மேலும் பாரிகேட் வைத்திருந்த இடங்களிலும் அவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக இயக்கியுள்ளனர்.


மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


தொடர்ந்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் மஹிந்த்ரா ஸ்கார்பியோ கெட் அவே எஸ்யுவி கார் ஒன்றைக் கொண்டு சுஸுக்கி டிசையர் காரை சேஸ் செய்யத் தொடங்கியுள்ளனர்.






தொடர்ந்து பின்னால் சென்று காவலர் வண்டி இடித்து நிறுத்த முயற்சித்தபோதும் கொஞ்சமும் அசராமல் வழியில் இருசக்கர வண்டிகளில் சென்ற பயணிகளை இடித்துத் தள்ளியபடி சுஸுக்கி டிசையர் சென்று கொண்டே இருக்கும் சிசி டிவி காட்சி வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


மேலும் படிக்க: இலங்கை : தொடர் போராட்டத்தில் இணைய நாட்டு மக்களுக்கு அழைப்புவிடுத்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக்கா


மேலும், ஜங்ஷன் ஒன்றில் ஓடும் கார் மீது சுட்டு துப்பாக்கி முனையில் காரில் இருந்த நபர்களை காவலர்கள் துரத்திப் பிடிப்பதும் மற்றொரு வீடியோவில் பதிவாகியுள்ளது.


சுமார் 10 கி.மீ தூரம் வரை காவலர்கள் இந்நபர்களை துரத்திப் பிடித்ததோடு 10 கிராம் ஹெராயினும் இவர்களிடம் கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக இதேபோல்  கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் கடைக்காரர்களிடமிருந்து செயின் பறித்து மாருதி 800 காரில் தப்பியோடும் 4 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்த காட்சி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்


Icecream Ad : ஐஸ்க்ரீம் விளம்பரத்தால் வந்த சர்ச்சை: இனிமே பெண்கள் விளம்பரத்துக்கு வேண்டாம்.. உத்தரவிட்ட அரசு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண