தமிழ்நாடு:


பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குகிறது


ஆன்லைன் சூதாட்டத்தை  தடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி  பழனிசாமி வலியுறுத்தல்


தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 3968 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு


தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 972 பேருக்கு கொரோனா


செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கீழடி மற்றும் திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன




சென்னையில் விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்க்கு முதலமைச்சர் ரூபாய் மூன்று இலட்சம் நிவாரணம்


இந்தியா:


தேசத்தை உங்கள் அனுபவம்  என்றும் வழிநடத்தும் என வெங்கையா நாயுடு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசினார்.


பத்ரா சால் முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத் காவல் ஆகஸ்டு 22 வரை நீட்டிப்பு


ஜூலை 18-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது


பீகாரில் ஆளும் ஐக்கியஜனதாதள கட்சியின் உறுப்பினர் இன்று ஆலோசனை - பாஜக கூட்டணி குறித்து நிதிஷ்குமார் முடிவெடுப்பார் எனத்தகவல்


மகராஷ்டிராவில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் -  முதற்கட்டமாக 15 அமைச்சர்கள் பதவியேற்கலாம் எனத்தகவல்


டெல்லியில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. 6 மாதங்களில் இல்லாத அளவில் மீண்டும் உயர்வு


பண்டிகைகாலம் என்பதால்  கொரோனா பரவும் அபாயம் - மத்திய அரசு எச்சரிக்கை


விளையாட்டு:


சென்னை செஸ் ஒலிம்பியாட் இன்றுடன் நிறைவு -  நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு


கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவுபெற்றது. 


கடைசி நாளில் 5 தங்கம்வென்றது இந்தியா. 22 பதக்கங்களுடன் 4வது இடத்தையும் பிடித்தது




2026ம் ஆண்டு காமன்வெல்த் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு


ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


உலகம்:
உக்ரைனுக்கு மேலும்  1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு


சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் எரிந்து சேதமடைந்தது


சினிமா:


இயக்குநர் சுந்தர். சி டைரக்‌ஷினில் வெளியாகவிருக்கும் காஃபி வித் காதல் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிளாக “தியாகி பாய்ஸ்” பாடல் வெளியாகிவுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண