சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியார் கல்லூரி ஆங்கில பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். மாணவிகளின் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி முதல்வர் தங்கவேல் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சென்னை கோயம்பேடு பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வரும் 40 வயதான தமிழ் செல்வன் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். ஆன்லைன் வகுப்பின்போது, இவர் தொடர்ந்து பல்வேறு மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி, பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் மாணவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க: நடிகை பாலியல் புகார்: ‛சர்வைவர்’ அர்ஜூனை விடுதலை செய்த நீதிமன்றம்!


இதனால், ஆத்திரமடைந்த சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று மதியம் கல்லூரி வளாகத்தில் சம்பந்தப பட்ட பேராசிரியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்து வந்த மதுரவாயல் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் கல்லூரி வளாகத்தில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர். உதவி ஆணையர் ரமேஷ் பாபு மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் படிக்க: 14 வயது சிறுவனுடன் காதல்... 40 வயது பெண் செய்த வேலை - அதிர்ச்சியில் குடும்பம்!


அப்போது, கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய தமிழ்ச் செல்வனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து கமிட்டி அமைத்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியபின்பு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண