தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜூன் மீது பரபரப்பு மீடூ புகார் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்துஅர்ஜுன் இதுவரை 70 நடிகைகளுடன் நடித்துவிட்டேன். யாரும் இப்படி புகார் கூறியதில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இந்த புகார் கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ருதியின் புகாரை திட்டவட்டமாக மறுத்த அர்ஜூன் இதுவரை நான் பல கதாநாய்கிகலுடன் நடித்திருப்பதாகவும் யாரும் இதுபோல் என் மேல் குற்றச்சாட்டு சொன்னதில்லை எனவும் கூறினார். மேலும் ஸ்ருதி தனக்கு மானநஷ்டமாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் அர்ஜுன் வழக்கு தொடர்ந்தார்.
அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா நீக்கம்...காரணம் இது தான்!
இந்தப் புகார் குறித்து பெங்களூரு காவல் துறையினர் விசாரித்துவந்தனர். மேலும் நடிகர் அர்ஜுனை தண்டிக்க வேண்டுமெனவும், அவர் ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்தன.இதுகுறித்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
மூன்று ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இவ்வழக்கில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
‛எங்க ஏரியாவுல நடக்க முடியல சார்...’ சேறு சகதி குறித்து அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
இதையடுத்து அர்ஜுனுக்கு எதிராக எந்தவித ஆதாரமோ, சாட்சியமோ இல்லை என நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கிலிருந்து அர்ஜுனை விடுவிப்பதாக உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: IPL RETENTION 2022: சிலர் காலி... பலர் ஜாலி... ஐபிஎல் 2022 மாநாட்டின் ‛ரிபீட்டு’ ஹீரோஸ் இவங்க தான்!
செட்டப் அம்மா... செட்டப் சித்தி... 6 பெண்களை திருமணம் செய்த நெல்லை வின்சென்ட் கைது!
டிச.5 மெரினாவுக்கு வாங்க...’ அதிமுக செயற்குழு கூடும் நிலையில் சசிகலா அழைப்பு!
விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தருவதாக பண மோசடி: ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை மனு தள்ளுபடி!
IPL 2022 Retention: இத்தனை கோடியா... தக்க வைக்கப்பட்ட ஐபிஎல் வீரர்கள் 27 பேரின் விலை இது தான்!