சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர் பள்ளிக்கரணையில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (30) என்பவரும் நண்பர்கள். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சதீஷ் தனது காதலியை அழைத்து சென்று மூர்த்தி வீட்டில் தங்கி வந்துள்ளார். அப்போது மூர்த்தி வீட்டில் இருக்கும் செல்போன், ரூ.25 ஆயிரம் பணத்தை சதீஷ் திருடிச் சென்றுள்ளார்.


இது குறித்து மூர்த்தி, சதீஷை தொடர்பு கொண்டு பணம் மற்றும் செல்போனை திரும்பி தரும்படி கேட்டுள்ளார். இதற்கு சதீஷ் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். இப்படியே சில நாட்கள் இழுத்தடித்து உள்ளார் சதீஷ். ஒரு கட்டத்தில் மூர்த்தி ஆத்திரமடைந்து சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போதும், சதீஷ் செல்போன் மட்டுமே மூர்த்தியிடம் கொடுத்துள்ளார். 


இதனை அடுத்து, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மேடவாக்கம் அருகே இருவரும் மது அருந்தியுள்ளனர். போதையில் இருந்த சதீஷிடம் தனது வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற ரூ.25 ஆயிரத்தை திருப்பி கொடுக்கும்படி மீண்டும் கேட்டுள்ளார் மூர்த்தி. இதனால் இருவர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.


இருவருக்கும் வாக்குவாதம் நீடித்ததை அடுத்து, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த மூர்த்தி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர், மூர்த்தியையும் சதீஷ் வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.


உடனே இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த மூர்த்தி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


பின்னர், சதீஷ் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Schools Reopen: 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களே...! ரெடியா? இன்று பள்ளிகள் திறப்பு..!


Mettur Dam: 90வது ஆண்டாக மேட்டூர் அணையினை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!


CM Stalin Inspection: கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு