வழக்கு உதவிக்காக தன்னை தேடிவந்த பெண்ணை நிர்வாணமாக படமெடுத்து பணம் பறித்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் தன் கணவரை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்த இருந்த அப்பெண் சட்டப்படி விவாகரத்து வாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் வழக்கறிஞரை தேடிப்பிடித்துள்ளார். அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் டார்ஜன் (44) என்பவரை நாடியுள்ளார். வழக்கறிஞரான டார்ஜன் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆவார்.
தன்னுடன் உதவிகேட்டு வந்த பெண்ணிடம் விவாகரத்து வழக்கை தானே எடுத்து நடத்துகிறேன் என உறுதி அளித்த டார்ஜன், அது தொடர்பான ஆவணங்கள் வேண்டுமென்றும், வீட்டில் வந்து வாங்கிக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். அந்தப்பெண்ணின் வீட்டுக்கு சென்ற வழக்கறிஞர் கையில் மயக்க மருந்து கலந்த ஒரு ஆப்பிள் ஜூஸுடன் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மயக்கமருந்து ஜூஸைக் கொடுத்த வழக்கறிஞர் அவர் மயங்கியதும் அப்பெண்ணை நிர்வாணப்படுத்தி பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அவரிடம் பாலியல் ரீதியாகவும் அத்துமீறியுள்ளார். மயக்கம் தெளியும் வரை காத்திருந்த வழக்கறிஞர் டார்ஜன், கண்விழித்த பெண்ணிடம் தான் எடுத்த நிர்வாணப் புகைப்படங்களை காட்டி மிரட்டியுள்ளார். தனக்கு பணம் வேண்டுமென்றும் இல்லையென்றால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
வழக்கறிஞர் மட்டுமல்லாமல், டார்ஜனின் மனைவியும் சேர்ந்து அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். பெண்ணின் புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறை தலைமறைவான டார்ஜனை தீவிரமாக தேடி வந்தனர். தப்பித்த டார்ஜன் கொடைக்கானலில் பதுங்கியுள்ளார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து கொடைக்கானலில் பதுங்கி இருந்த டார்ஜனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கொடைக்கானலில் இருந்து திருவள்ளூருக்கு அழைத்து வரப்பட்ட டார்ஜன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்ணிடம் பணம் இருப்பதையும், அவர் தனியாக இருப்பதையும் தெரிந்துகொண்ட பின்னரே வழக்கறிஞர் இந்த சதித்திட்டத்தில் இறங்கி இருக்க வேண்டுமென கூறப்படுகிறது. தனியாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென்பதே போலீசாரின் அறிவுறுத்தலாகவும் உள்ளது.
தமிழ்நாட்டை கலக்கிய ‛அமாவாசை’ திருடர்கள் கைது; இரும்பை குறிவைக்கும் குறும்பு கொள்கை!
”என்ன என்ன ஐயிட்டங்களோ” ஸ்டைலில் திருட்டு..! முகக்கவசங்களையும் விடாமல் லவட்டிய திருடர்கள்..!