சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை தனியார் வங்கியில் பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட இதே வங்கியின் மற்றொரு கிளையின் மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவரை போலீசார் கண்டுபிடித்தனர்.


பின்னர், போலீசார் முருகனை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரை இன்று கைது செய்தனர். இந்த கொள்ளையில் மொத்தம் 7 பேர் இணைந்து செயல்பட்டதை கண்டுபிடித்த போலீசார் சந்தோஷ், பாலாஜி மற்றும் சக்திவேல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த நிலையில், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டது.





இந்த சூழலில், போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரின் விசாரணையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முன்கூட்டியே இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்ட முருகனும், அவரது கும்பலும் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த சனிக்கிழமை இந்த சம்பவத்தை நிறைவேற்றியுள்ளனர்.


மேலும் படிக்க : சினிமா பட பாணியில் அண்ணாமலையார் கோவில் உண்டியல் பணம் திருட்டு - மதுரையை சேர்ந்தவர் கைது


முருகனும், அவரது நண்பர்களும் ஜிம்மிற்கு ஒன்றாக உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளனர். இந்த சூழலில்தான் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொள்ளைத் திட்டத்தை தீட்டியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞர் மட்டும் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளார்.




அவரைப் பிடிக்கவும் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் எஞ்சிய நகைகள் விரைவில் மீட்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும், தலைமறைவாக உள்ள கொள்ளையரையும் தேடிக்கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொள்ளையின்போது வங்கியில் அலாரம் அடிக்காதது ஏன்? என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், வங்கியின் உள்ளே இருந்து யாரும் உதவி செய்தனரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : சென்னையை பதறவைத்த வங்கி கொள்ளை : முக்கிய குற்றவாளியை கொத்தாக அள்ளிய காவல்துறை!


மேலும் படிக்க : Crime: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடியை கட்டிலோடு தூக்கிக்கொண்டு வெட்டிய கும்பல் - நெய்வேலியில் பரபரப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண