ராஜ்பவனில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து: முதல்வர் இன்! ஈபிஎஸ் அவுட்..?

75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரவி ராஜ்பவனில் தேனீர் விருந்து அளித்துள்ளார்.

Continues below advertisement

75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரவி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தேனீர் விருந்து அளித்துள்ளார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சபாநாயர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம், பழனிவேல் தியாகராஜன், மெய்நாதன், செந்தில் பாலாஜி ஆகியோர்  மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். திமுக தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தன் மற்றும் த.மா.க கட்சித் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.  மேலும், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார்.   தமிழக சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இடைக் கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. ஓபிஎஸ் தரப்பினர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஈபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை, அதேபோல், ஈபிஎஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ் தரப்பினர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகின்றனர். இதற்கு முன்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்விலும் தனித் தனியே கலந்து கொண்டனர் எனபது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

இதற்கு முன்னர் தமிழக ஆளுநர் ரவி, கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இதற்கு முன்னர் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக இன்று காலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். அத்துடன் அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார். அதில், “ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தில் இருந்து இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை இன்று நாம் கொண்டாடி வருகிறோம். எண்ணற்ற தியாகிகளின் பங்களிப்பால் நாம் சுதந்திரத்தை கொண்டாடி வருகிறோம். நாட்டு விடுதலைக்கு மற்றும் சமூதாய விடுதலைக்கு போராடிய அண்ணா, மத வெரியர்களால் தேச பிதா காந்தி அடிகள் சுட்டி கொலை செய்யப்பட்ட இந்த நாட்டிற்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்று கூறினார். அதை நான் இன்று நிணைவு கூர்கிறேன் என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிகழ்வில், முதல்வர் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் வரவேற்பு விழாவில் மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கு  முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்து, உத்தமர் காந்தியடிகளின் சிலையினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement