கடலூர் மாவட்டம் நெய்வேலி (30) வட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் வீரமணி (வயது 36). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளன. இவரது மனைவி செல்வி கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.

 

 இந்த நிலையில் வீரமணி மற்றும் அவரது தாய் கலியம்மாள் இரண்டு பேரும் வட்டம் 30-ல்  வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீரமணி நேற்று இரவு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரவு 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் தூங்கி வீரமணியை கட்டிலோடு தூக்கிக்கொண்டு வீட்டின் அருகே சரமாரியாக வெட்டி உள்ளனர். சத்தம் கேட்ட  கலியம்மாள் கூச்சலிட்டதால்  மர்ம நபர்கள் வீரமணியை விட்டுவிட்டு ஓடி சென்றனர். இதில் வீரமணி பலத்த காயம் ஏற்பட்டு அவரை நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

 வீரமணியை பரிசோதித்த  மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார். பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீரமணி மீது நெய்வேலி பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை, என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் நெய்வேலி போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாவார்.

 

வீரமணி மகன் சிவக்குமார் இவரை கடந்த இரண்டு வருடம் முன்பு மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். அந்த கும்பல் தான் வீரமணியை கொலை செய்தார்களா? இல்லை  வீரமணியை   முன்விராத காரணத்தால் வெட்டி கொலை செய்தார்களா என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.நெய்வேலியில் ரவுடி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



பத்திரிகையாளர் என்றால் பரமாத்மா கிடையாது- பார்த்து நடந்து கொள்ளுங்கள்!! மீண்டும் பத்திரிகையாளர்களை சீண்டிய சீமான்.







கடலூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கடல் தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு‌ வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல் தீபன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சீன கப்பல் இலங்கை வருகை குறித்த விவகாரம் இந்தியாவால் எதிர்க்கவோ, தடுக்கவும் முடியவில்லை இலங்கை இந்தியாவுடன் நட்பு இருப்பது போல காட்டுமே தவிர பௌத்தர்கள் என்ற முறையில் சீனாவின் பக்கமே நிற்கும். இது இந்தியாவிற்கு பேராபத்தானது. இலங்கைக்கு இந்தியா ஆயுதம் பயிற்சி கொடுப்பதை நிறுத்த வேண்டும்.


கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பவர்கள் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்று  அரசு கூறியிருக்கும் நிலையில் அரசு மதுக்கடைகள் திறந்து விற்பனை செய்வதை எவ்வாறு ஏற்பது என்றும்,
அரசு சார்ந்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் மது தயாரிக்கின்ற சூழலில் அரசு இது போன்ற கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.


ஆந்திரா அரசு கொற்றலயாற்றில் குறுக்கே அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதி இருப்பதை சீமான் வரவேற்பதாக கூறினார். ஆனால் அதானி துறைமுகம் கட்டுகிறேன் என பெரிய மதில் சுவர் கட்டி ஆற்றை தண்ணீர் போகாமல் தடுத்ததை பார்த்தீர்களா ஆய்வு செய்தீர்களா? முதலில் எதை செய்யாமல் அவருக்கு கடிதம் எழுதி என்ன பயன் வரப்போகிறது.


 பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறியதற்கு பதில் அளித்த சீமான் கச்சத்தீவை மீட்க வேண்டும் என நான் தான் குரல் கொடுக்க வேண்டும். அதனை அண்ணாமலை தான் மீட்க வேண்டும். அவரிடம்  அதிகாரம் அனைத்தும் உள்ளது குரல் கொடுப்பேன் என அண்ணாமலை கூறுவது அவர்  டப்பிங் ஆர்டிஸ்ட்டா, குரல் கொடுப்பேன் குரல் கொடுப்பேன் என்று கூறுவதற்கு, பத்திரிகையாளர் மண்டையை உடைத்து விடுவேன் என்று கூறியிருப்பது பேசுபொருளாகிய நிலையில் அது குறித்த கேள்விக்கு
பத்திரிக்கையில் சேர்ந்துவிட்டால் பரமாத்மா கிடையாது பார்த்து நடந்து கொள்ளுங்கள். சரியான முறையில் கேள்வியை கேட்க வேண்டும் என வலியுறுத்தி கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண