செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் காகண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கடந்த ஒரு மாதமாக கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்   மற்றும் காவலர்கள் மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், அடிக்கடி தன்னை மாமல்லபுரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் பணிக்கு அனுப்புவதாலும், எனது வீட்டில் இருந்து. இந்த காவல் நிலையம் 50 கிலோமீட்டருக்கு மேல் இருப்பதால் தன்னால் அந்த காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை, இதுகுறித்து மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பளருக்கு புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தனக்கு இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை என கடிதம் எழுதியுள்ளார்.

 



 இக்கடிதத்தை கண்ட மாவட்ட காவல் காகண்காணிப்பளர் உடனடியாக அப்பெண்ணை பாதுகாக்க காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அந்த பெண் காவலர் தன்னுடைய கைபேசியை அனைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார், போலீசார் பெரும் முயற்சியில் அந்த பெண் கல்பாக்கம் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்ததை கண்டு உடனடியாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து திருகழுக்குன்றம் ஆய்வாளர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டு அந்த பெண்காவலருக்கு மருத்துவ ஒய்வு அளித்துள்ளார்.

 


 

 

பின்னர் அவரை அவர்களது வீட்டிருக்கே பத்திரமாக அழைத்து சென்று விட்டுள்ளனர். இது குறித்து  செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அப்பெண்ணிடம் விசாரணை நடக்க உள்ளது.

 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .