மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் என்பவரின் மகன் 27 வயதான கனிவண்ணன். இவர் கேட்டரிங் படித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் மீண்டும் ஊர் திரும்பி சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்றிரவு சீர்காழி சட்டநாதபுரம் உப்பனாற்று கரையில் தனது இருசக்கர வாகனத்தின் அருகில் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்பொழுது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கனிவண்ணன் இறந்து கிடப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.




தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சீர்காழி காவல்துறையினர் கணிவண்ணனின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கனிவண்ணனை அடித்துக் கொலை செய்தது யார் எனவும், எதற்காக கொலை நடந்துள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன கனிவண்ணனுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் சீர்காழி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


World Test Championship: டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. விலகும் உனத்கட்.. மாற்று




இதனால் சீர்காழி- மயிலாடுதுறை இடையே  போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குற்றவாளிகளை பிடிக்க படுவார்கள் என அவர்கள் உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் கொலை நடந்த இடத்தைபார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் விரைந்து குற்றவாளிகளை பிடிக்க 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள், தலைமையில் 8 ஆய்வாளர்கள், 11 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்துள்ளதுள்ளனர்.  


Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் கடும் பஞ்சம்... வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு... திணறும் மக்கள்..




மேலும் கனிவண்ணனின் தலையில் ஏற்பட்டுள்ள காயம் துப்பாக்கியால் ஏற்பட்ட காயம் போன்று தென்படுவதால் இறப்பின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக உடலை தடை அறிவியல் சோதனைக்கு உட்படுத்த சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும்  சீர்காழி தாலுகாவில் விஐபிகள் தங்களது பாதுகாப்பிற்காக வைத்துள்ள துப்பாக்கிகளை போலீசார் கணக்கெடுப்பு செய்து அவர்களை நேரில் விசாரணைக்கு வரவழைத்துள்ளனர். கொலை சம்பவத்தை அடுத்து சீர்காழி நகர் முழுவதும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரணமாக சீர்காழி நகர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


TN Rain Alert: மழை இருக்கு ஆனா இல்லை.. எந்தெந்த பகுதிகளில்? வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட் என்ன?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண