இன்று கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என தமிழ்நாடின் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ”கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.இன்று மற்றும் நாளை மழை தென் தமிழகத்தில் இருந்து சற்று விலகி வட தமிழகம், கொங்கு மண்டலம் மற்றும் வட உள் தமிழகத்தை நோக்கி நகர்ந்து பரவலாக மழை பெய்யும். மேலும் கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த பகுதிகளில் மழை பெய்யும் போது பெங்களுரூவில் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி மே 10 ஆம் தேதி உருவாகும். மேலும் அது இந்திய கடற்கரையிலிருந்து பர்மா/வங்காளதேச பெல்ட்டை நோக்கி நகரும். இதனால தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா - தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madurai Chithirai Thiruvila 2023 : மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்... பக்தி பரவசத்தில் பக்தர்கள்!