உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


மே 3-ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பத்திரிகையாளர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயகத்தின் 4வது தூணை வலிமையாக வைத்திருக்க பணியாற்றும் துணிச்சல் மிகு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். 






உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையில் இந்தியா இந்தாண்டு 161-வது இடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் 150வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டும் 161வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்பை விட மோசமாக ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது என்பதே இதன் அர்த்தமாகும். தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் 152வது இடத்திலும், பாகிஸ்தான் 150வது இடத்திலும், இலங்கை 135வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


யுனெஸ்கோ அறிக்கையின்படி, கடந்த 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை 455 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கணக்கு 2021ஆம் ஆண்டை காட்டிலும் அதிகம். யுனெஸ்கோவின் இந்த அறிக்கையின்படி 4 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டதாக கணக்கிடப்படுகிறது. 


இந்தியாவில் சமீப காலமாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், கொலைகள்,  வழக்குகள் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டால், மிரட்டுவது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் அரங்கேறுவதாக செய்திகளை பார்க்க முடிகிறது.  குறிப்பாக அரசியல்வாதிகள் பெரிய தவறுகளை இழைக்கும் போது, அது குறித்து வழக்குகள் ஏதேம் பதியப்படாதபோது,  பத்திரிகையாளர்கள் அது பற்றிய செய்திகளை சுதந்திரமாக வெளியிட முடியுமா என்பதும் கேள்விக்குறியே?


ஊடக நலன்களை வலியுறுத்தும் நாள்


1993ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு மே 3ஆம் தேதி அன்றும் உலக நாடுகள் சபை உலக பத்திரிகை சுதந்திர தினத்தை கடைபிடித்து வருகிறது. 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ மூலம் ஆப்ரிக்க பத்திரிகையாளர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஊடக சுதந்திரம், பத்திரிகையாளர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நலன்களை வலியுறுத்தும் நாளாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.


மேலும் படிக்க


RK Suresh: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு.. சிக்கிய ஆர்.கே.சுரேஷின் வங்கிக்கணக்குகள் முடக்கம்..!