Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் பணவீக்கமானது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பஞ்சம்
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதங்களில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு வேளை உணவிற்கே நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுமார் 16 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.
பணவீக்கம் உயர்வு
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் பணவீக்கமானது 36.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 1964-ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மாதம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மார்ச் மாதத்தில் பணவீக்கமானது 35.4 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 36.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இப்படி, பணவீக்கம் அதிகரித்து வருவதால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு
அதன்படி, போக்குவரத்து சேவை விலைகள் 56.8 சதவீதம், உணவுப் பொருட்களின் விலைகள் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெங்காயத்தின் விலை மட்டும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 228.28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் கோதுமை மாவின் விலை 120.66 சதவீதம் அதிகரித்துள்ளது. சிகரெட்டின் விலை 165.88 சதவீதம் அதிகரித்துள்ளது. லிப்டன் தேயிலையின் விலை 94.60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏரிவாயுவின் விலை 108.38 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) 100 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, அதன் வட்டி விகிதத்தை 21 சதவீதம் ஆக ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து, ஜூன் 12ஆம் தேதி நாணயக் கொள்ளை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பங்க் ஆஃப் பாகிஸ்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் திணறி கொண்டிருக்கும் நிலையில், பணவீக்கம் அதிகரித்தது மேற்கொண்டு வரும் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Hollywood: போராட்டத்தில் ஈடுபடும் திரைப்பட எழுத்தாளர்கள்: ஒடிடி நிறுவனங்களுக்கு சவால்: காரணம் என்ன?
The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது: உளவுத்துறை எச்சரிக்கை