சென்னை தாம்பரத்தில் உள்ள சிடிஓ காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சஜீஸ்குமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த சனிக்கிழமை அன்று தனது குடும்பத்தினருடன் ஆவடியில் உள்ள மாமியார் வீட்டுக்கு   சென்றுள்ளார். அப்போது சஜீஸ்குமார் வீடு திறந்து இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.



 

இதனால் அதிர்ச்சி அடைந்த சஜீஸ்குமார் உடனடியாக வீடு திரும்பிய போது,  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு  பீரோவில்  இருந்த  10  சவரன் தங்க நகை, பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெளியில் நிறுத்தி வைக்கபட்ட விலையுர்ந்த இருசக்கர வாகனம் திருடபட்டது தெரியவந்தது.

 

இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன்  வந்த போலீசார் வீட்டில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான  கட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அரை நிர்வாணமாக குடியிருப்பில் உள்ள பூட்டிய வீட்டை  குறிவைத்து இறங்கிய கொள்ளையர்கள் அருகில் இருந்த வீடுகளின் முன் தால்பாளை போட்டுவிட்டு நூதன முறையில் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை  தேடி வருகின்றனர்.



 

இதுகுறித்து காவல்துறையை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் குறித்து தகவல் வந்தது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிவில் கொள்ளை அடித்தவர்கள் யார் என்பது தெரிய வரும் என தெரிவித்தனர்.

 




மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!


Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண