மேலும் அறிய

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

மது போதையில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வீசியதாக முதற்கட்ட தகவல்

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா காணப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது,. பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் குறைந்த அளவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அங்குள்ள கடைகளுக்கு அதிக வாடகை பிரச்சினை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக வியாபாரிகள் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தி வந்தனர். குறைந்த அளவு செயல்படும் கடைகளால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டமும் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

இந்த சூழலில் தான்  நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளனர். அதிக சத்தத்துடன் வெடிகுண்டானது வெடித்து உள்ளது,  குறிப்பாக பேருந்து நிலையத்திற்குள் இயங்கும் ஒரு பழ ஜூஸ் கடைக்கு அருகில் நாட்டு வெடிகுண்டானது வீசப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை என்பதாலும்  வெடிகுண்டு வெடித்ததில்  அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் பேருந்து நிலையத்திலும் பெரிய எந்த வித சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,

நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றவர்கள் யார்? எதற்காக இந்த பகுதியில் வீசினர்? இதனை எங்கு தயார் செய்தனர் என்றும், வேறு ஏதேனும் அசம்பாவித  சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பேரூந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு  காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்,

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

இந்த சூழலில் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் கடை ஒன்றில் வேலை பார்க்கும் கிருஷ்ணன் மற்றும் சுடலை என்ற இரு இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர், நேற்று முன் தினம் பாளையங்கோட்டையில் நடந்த கோவில் திருவிழாவில் வெடிக்காத பட்டாசுகளை எடுத்து சென்று இருவரும் மது போதையில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து விளையாட்டாக வீசி பார்த்துள்ளனர் என காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது, இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

தலைப்பு செய்திகள்

காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget