சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் பள்ளியைச் சேர்ந்த, பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் தனது தோழியுடன் சென்று வந்தார். இதில் அழகு நிலைய பெண் பொறுப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது உதவியுடன், அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.


 

இது தொடர்பாக மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையைச் சேர்ந்த மணிமாறன் மகன் விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த பொன்னுவேல் மனைவி லட்சுமி (45) உட்பட 4 பேர் மீது காரைக்குடி மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, லட்சுமி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான மன்ஸிலை தேடி வந்தனர்.



மன்ஸில் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான மன்ஸில்லை நேற்று கைது செய்தனர்.






சிவகங்கை எஸ்பி. செந்தில் குமார் கூறுகையில், “பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மொபைல் எண் தொடர்புகளை கண்காணிக்க வேண்டும். பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் சிறுமிகள் எந்தவித தயக்கமுமின்றி மகளிர் காவல் நிலையங்கள், தொலைபேசி எண்கள் 100, 1098 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.


மேலும் காரைக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், “சமீபத்தில் கோவையில் பள்ளி மாணவிக்கு நடத்த பாலியல் கொடுமையை தொடர்ந்து, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. காரைக்குடியில் நடந்த சம்பவம் போல், திண்டுக்கல்லில் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல் வெளிப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போல் பாலியல் பிரச்னை எழும்போது மாணவிகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்போது தான் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இதனால் குற்றங்கள் குறையும்” என தெரிவித்தனர்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்ற நபர் - உடலை வெட்டி கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்