வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 5 இடங்களில் அதிகனமழையும், 37 இடங்களில் மிககனமழையும், 66 இடங்களில் கனமழையும் பெய்தது.




கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். இதனால், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


நாளை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.




22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையிலே நல்ல மழை பரவலாக பெய்தது.


வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழக கரையை நெருங்கும்போது மழை மேகங்களம் அதிகளவில் குவிந்திருந்தன. அவை சென்னைக்கு அருகே வரும் என்று கணிக்கப்பட்டு இருந்ததால். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், வானிலை மாற்றம் காரணமாக மழை மேகங்கள் தெற்கு ஆந்திரப்பகுதிக்கு சென்றுவிட்டன. அங்கு, அனந்த்பூரில் நம்புளிபுளிகுண்டாவில் 24 செ.மீ. மழை கொட்டித்தீர்த்துள்ளது. திருப்பதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


ஏற்கனவே கணித்தபடி 17-ந் தேதி மழை மேகங்கள் சென்னைக்கு வந்திருந்தால், கடந்த 9-ந் தேதி மழையினால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சென்னை மாநகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க : கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? பேரிடர் மேலாண்மை அட்வைஸ் இதோ!